'இன்பா' வின் வலைப்பூ . . .

அல்லக்கை – சிறுகதை
மறுபடியும் அலறியது அழைப்பு மணி. காலையிலிருந்து ஏறக்குறைய இது பதினைந்தாவது முறை. சிட்டுக்குருவி சப்தம், குயிலோசை, செல்லமாய்

அழைக்கும் மழலை என விதமாய் அழைக்கும் அழைப்பு மணி என்றால் கூடப் பரவாயில்லை. இது அலறல். பழைய சைக்கிள் மணியை காதுக்குப்

பக்கத்தில் வைத்து விடாமல் அடிக்கின்ற மாதிரி. சப்தம் கேட்டவுடனே கதவுக்கு ஓடிவிட வேண்டும், இல்லையெனில் திரும்பவும் கேட்க்க நேரிடும்.

இங்கே யாருக்கும் காத்திருக்கும் அளவுக்கு நேரமில்லை. சில சமயம் பழகிய முகங்களும், சில சமயம் புதிய முகங்களும் … எல்லோருக்குமே

அழைப்பதற்க்கென்று ஏதோ ஒரு உறவு வாய்த்திருக்கிறது, அம்மா, அக்கா, அண்ணன், அய்யா. ஐயோ, காலையிலிருந்து நாலு ஓட்டுக்கு நாற்பது ஓட்டுச்

சீட்டுக்கள் எல்லோருக்கும் ஒரே கோரிக்கைகள்… வேறு வேறு வார்த்தைகளில், வேறு வேறு சின்னங்களில். இந்த முறை பழகிய முகம். பழக்கம் என்றால் நான் டவுசர் போட்ட காலத்திலிருந்தே பழக்கம். வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையுமாய் நின்றிருந்தான் இராமசாமி. அதே கரை

வேட்டிதான். அதே என்றால் கடைசியாய் நாங்கள் சென்னையில் சந்தித்த போது அணிந்திருந்த அதே கரை வேட்டி தான். இப்போது மாற்றியிருப்பான்

அல்லது விட்டொழித்திருப்பான் என்று நினைத்தேன். ம் .. ஹீம்.

நானும் இராமசாமியும் ஒரே தெருவில்தான் இருந்தோம். தெருவின் கடைசிக்கு முந்தைய வீடு எங்கள் வீடு, அதற்க்கு அடுத்த வீடு இராமசாமி வீடு. எட்டாம் வகுப்பு வரையிலும் நானும் இராமசாமியும் வகுப்புத் தோழர்கள், அப்புறமாய் சில வருடங்கள் பள்ளித் தோழர்கள். முதலில் சின்ன

இடைவெளிதான், அப்புறம் நான் தொழிற்க்கல்விக்கும், அவன் தொழிலுக்கும் போனதிலிருந்து ஒர் ஊர்க்காரர்களாய் மட்டும் ஆகிப்போனோம். எங்கள்

தெருவும் சந்தைப் பேட்டை தெருவும் சந்திக்கும் மூலையில் தான் இராமசாமியின் கடை. ‘இராமசாமி பலசரக்குக் கடை’ என்பதை விட ‘மூலைக்கடை’ என்பது தான் பிரபலம். மூலைக்கடைக்கு இராமசாமி மூன்றாம் தலைமுறை முதலாளி.

‘தியாகு எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்’ – மூலைக்கடைக்கு அந்தப் பக்கத்திலிருந்து இரண்டாவது கடை. தீர்க்கமுடியாத பழுதுடன் சில பல பழைய வானொலிகளும், பிரித்துப் போட்ட ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் மட்டுமே இருக்கின்றது காலம் காலமாய், கடையின் பெயரை நியாப்படுத்த

வேண்டாமா? ஆனால் பலசரக்கு கடைக்கு நிகராக எப்போதும் ஒரு கூட்டம், கரை வேட்டிக் கூட்டம். ஆகாஷவானியின் செய்தியறிக்கையை தவிர்த்து

விட்டுப் பார்த்தால் எப்போதும் அரசியல் செய்திகள் தான் கறை புரண்டு ஓடும். தியாகராஜன் என்ற தியாகு ‘அண்ணன்’ அந்தக் கட்சியின் நகரச்

செயலாளர், இராமசாமிக்கு அண்ணன் முறை. பெரியண்ணன் போல, குறைந்தபட்சம் பதினைந்து இருபது வயது வித்தியாசமிருக்கும். இங்கு

இல்லையென்றால் மட்டுமே … ஒருவேளை இராமசாமியை மூலைக்கடையில் பார்க்கக் கூடும்.

அம்மா ஒரு நாள் சிவன் கோவிலுக்கு வெளியே பார்த்தாய் சொன்னார்கள். அவன் பிரதோஷத்திற்க்கு போகின்ற ஆள் கிடையாது.

“அந்த கட்சிக்காரப் பயலுகளோட சேர்ந்து சிகரெட் பிடிச்சுக்கிட்டு இருந்தான் போல, என்னப் பார்த்ததும் சிகரெட்ட தூக்கிப் போட்டுட்டான். வெள்ளையும்

சொள்ளையுமா பெரிய மனுஷன் மாதிரிதான் இருக்கான். தண்ணி கிண்ணியெல்லாம் அடிப்பான் போல கண்ணமெல்லாம் உப்பிப் போய் …”

“நீயும் அவன் கூட சேர்ந்து கெட்டு கிட்டு போகாத …”

வயதுக்கு மீறிய இந்த சிநேகிதம் தான் காரணமா என்று சரியாகத் தெரியவில்லை. இராமசாமிக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த வயதுக்கு மீறிய பெரிய மனுஷத்தனம் மிக இயல்பாய் பொருந்திப் போய்கிறது. நானெல்லாம் காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கின்ற போதே தினத்தந்தி படித்து தெளிவாய் அரசியல் பேசுவான். எனக்கெல்லாம் முதல் ஓட்டுப் போடவே முப்பது வயதுக்கு மேலாகிவிட்டது. பதினெட்டு வயதுக்கு முன்னாலேயே பதினெட்டு ஓட்டு போட்டிருப்பான். “மாப்ள… ஒட்டு போடுறதுக்கு பூத்து பக்கம் கிக்கம் போயிறாத … உன் ஓட்டெல்லாம் போட்டாச்சு…” ன்னு அசால்டா சொல்லிட்டு போவான். பேசிக்கொண்டிருக்கும் இடைவெளியில் சைக்கிளில் போகும் எவரோ ஒருவரை “எண்ணே … பாத்தீங்களா, பார்த்துட்டு பாக்காம போறீங்க” என்பான். ஊரில் முக்கால்வாசிப் பேரை அவனுக்கும், பாதிப் பேருக்கு அவனையும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

எம்.எல்.ஏ வைப் பார்க்க, செக்ரட்ரியேட்ல ஒரு சின்ன வேலை , பொதுக்கூட்டம் … என்று எப்போது சென்னை வந்தாலும் பழைய எம்.எல்.ஏ

ஹாஸ்டலில் தான் தங்குவான், கட்சி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி. இந்த முறை அங்கில்லை. எழும்பூர் இரயில் நிலையத்தின் பக்கத்தில் தான் அந்த தெரு. ஏறக்குறைய சந்து தான், தண்டவாளத்தின் அகலத்தை தாண்டிவிட வாய்ப்பில்லை. அந்த சின்ன சந்தில் லாட்ஜை தேடிக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமமில்லை. உள்நுழைந்ததும் இடது புறத்தில் மூன்றாவது அறை என்று சொல்லியிருந்தான். அறைக் கதவு

தாழிடப்படவில்லை, என்னை எதிர்பார்த்து காத்திருப்பான் போல.

“வாடா … உன்னத்தான் எதிர்பார்த்துட்டிருந்தேன். நல்லாயிருக்கேல்ல?

அப்புறம்… எப்படி போய்கிட்டு இருக்கு?”

“நல்லா இருக்கேன். வீட்டுக்கு வந்திருக்கலாம்ல … ஏண்டா இங்க வந்து இருக்க ?”

“நம்ம வீட்டுக்கு வர்ரதப் பத்தி என்ன … நம்ம வீட்டுக்கு வராமலா… நான் மட்டும்னா பரவாயில்ல … நானும் இன்னொரு கட்சிக்காரரும் வந்தோம்.

அதான்…”

ஒருத்தர் கட்டிலிலும், ஒருவர் தரையிலும் வேண்டுமானால் படுத்துக் கொள்ளலாம். அவ்வளவு தான் இடம். அறையின் மூலையில் ஒரு சின்ன

மின்விசிறி கொஞ்சம் பெரிய சப்தத்துடன். மதிய வெயில் இன்னும் அறைக்குள் அலைந்து கொண்டிருந்தது. கதவை இன்னும் கொஞ்சம் திறந்து

வைத்தால் தேவலாம் போலிருந்தது.

“வீட்டுல எல்லாம் எப்படி இருக்காங்க, பொண்ணு ஸ்கூலுக்கு போய்கிட்டு இருக்காளா?”

“எல்லாரும் நல்லாயிருக்காங்க”

“வியாபாரமெல்லாம் எப்படி போய்க்கிட்டுருக்கு? கடைல புதுசா வேலையெல்லாம் பார்த்திருக்க போல, போன தடவை ஊருக்கு வந்த போது பார்த்தேன். நல்லா மார்டனா இருக்கு.”

“கடைய இப்ப நாம நடத்துறதில்ல … மூணு வருசத்துக்குன்னு நம்ம ஜெனகனுக்கு எழுதி கொடுத்திருக்கேன்.”

“ஏதாவது பிரச்சனையா?”

“எல்லாம் கடன் பிரச்சனை தான். வியாபரத்துல கொஞ்சம் நட்டமா போயிருச்சு, நல்லா போய்கிட்டு இருந்த கடை தான். ஒழுங்கா உட்க்காந்து

வியாபாரத்த பாத்திருந்தா இப்படி ஆயிருக்குமான்னு தெரியல. நம்ம தான் பாதி நாள் கட்சி கட்சின்னு சுத்துரோமே அப்புறம் எப்படி? கடை பசங்களும்

நம்பிக்கையான பசங்களாத் தான் இருந்தாங்க, என்னமோ தெரியல கையாடல் பண்ணிட்டாங்க. அவங்கள சொல்லி என்ன பண்றது, நமக்குள்ள வேணும். அதுல ஒருத்தன் இப்ப தனியா கடை போட்டிருக்கான். நல்லா இருந்தா சரி தான். நம்ம ஊர்ல மளிகை கடைல நட்டப்பட்டது நான் ஒருத்தனாதான் இருக்கும்.” விரக்தியாய் சிரித்தான்.

“முதல்ல இழுத்து புடிச்சிரலாம்ன்னு தான் நினைச்சேன், அப்புறம் வட்டிக்கு மேல வட்டின்னு எல்லாம் கை மீறிப் போயிருச்சு.”

“காலம் காலமா நடந்துகிட்டு இருக்கிற கடைய சட்டுனு மூடவும் முடியல … பேரு கெட்டு போயிரும்ல … பேரக் கீர மாத்தாம நான் எடுத்து

நடத்துறேன்னு ஜெனகன் சொன்னான். மூணு வருசத்துக்கு கைமாத்தி விட்டுருக்கு. வெளிய யாருக்கும் தெரியாது.”

“அப்புறம் ஏண்டா கட்சி கட்சின்னு கட்சிய கட்டிகிட்டு இன்னமும் இங்க சுத்திக்கிட்டு இருக்க?”

“கட்சியில இருக்குறதுனாலத் தான் வட்டி குடுக்க கொஞ்சம் முன்னப் பின்ன ஆனக்கூட பெருசா ஒன்னும் சொல்றதில்லை. இதுவே வேற ஒரு ஆளா

இருந்தா இன்னயேரம் கழுத்துல துண்டப் போட்டுருப்பாங்க.”

“ம் …”

“இந்த வருசம் நம்ம ஊரு பஞ்சாயத்து போர்டு எலக்சன்ல தலைவருக்கு நிக்கலாம்னு இருக்கேன். நம்ம ஊர் அமைச்சர் தான் தேர்தல் பொருப்பாளர்,

அதான் அவரை பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன். போன ரெண்டு எலக்சனுக்கும் நான் தானே அவருக்கு முன்னாடி நின்னு தேர்தல் வேலை பார்த்தது. இத்தனை வருசம் கட்சியில இருந்திருக்கோம் இதுவரைக்கும் ஒரு வார்டு கவுன்சிலர் போஸ்ட்டுக்காவது சீட்டு கேட்டிருப்பேனா? பத்து பனிரண்டு வருசமா எதிர்க்கட்சியா இருந்தப்பக்கூட, நம்ம ஊர்ல வேற எந்தக் கட்சியாவது ஜெயிச்சிருக்க விட்டிருக்கமா. போன தடவை எம்.பி எலக்சன்ல

தோத்தப்பக்கூட நம்ம ஊர்ல பதினைஞ்சாயிரம் வோட்டு லீடுங் தான்.”

“இது என்னடா இன்டர்வியூ போற மாதிரி பைல் …”

முன்னாள் அமைச்சர்களின் முன்னாலும் பின்னாலும் நின்ற படி சில, கைத்தறி ஆடைகளை பொன்னாடையாக பெற்றுக் கொள்வது மாதிரி சில,

ஆளுயர மாலையில் மறைந்து போன தலைவரின் பக்கத்தில் கொஞ்சமாய் எட்டிப் பார்த்தபடி, போராட்டங்களுக்கு தலைவரின் சார்பில் அறை கூவலிட்டு வைக்கப்பட்ட பிரம்மாண்ட தட்டி போஸ்டர்கள் சில என அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு புகைப்படத் தொகுப்பு. நாற்ப்பத்தி நான்கு முறை

கட்சிக்காக சிறை சென்றதில், முப்பத்து சொச்சதிற்கான ஆதாரங்கள். தலைமை தாங்க, சிறப்புறை, நன்றியுறை ஆற்ற அவனை அழைத்த சில

அழைப்பிதழ்கள். கடைசியாய் சில பரிந்துரைக் கடிதங்கள் என அரசியல் வாழ்க்கையை நன்றாகத் தான் தொகுத்திருந்தான்.

“என்ன ரெம்ப வெக்கையாயிருக்கா… அப்படியே வெளிய காத்தாட போய் ‘டீ’ சாப்பிட்டு கிட்டே வேணா பேசலாம்.”

“இல்ல வேணாம்டா …”

“மாஸ்டர் ஒரு ‘டீ’ ஒரு ‘பால்’. நீ இன்னும் பால் தானே? நீ மட்டும் தானா இல்ல வீட்டுல யாருமே காபி, டீ சாப்பிட மாட்டாங்களா? “

“நான் மட்டும் தான். அவங்க எல்லாம் சாப்பிட்டுக்குவாங்க.”

“நீ மெட்ராஸ் வந்த ‘விசயம்’ வீட்டுல தெரியுமா?”

“தெரியாது. மொத புலம்புவா. எப்பவும் பொலம்பரதுதான் … ஊர் உலகத்துல அவனவன் எப்படி எப்படி எல்லாம் சம்பாதிக்குறான், இங்க

சம்பாதிக்காட்டியும் கூட பராவாயில்ல இருக்கறத காப்பாத்தவாவது தெரியனும். ரெண்டும் இல்லன்னு அதே புலம்பல்தான்.”

“ம் …”

“சாமாளிச்சிடுவேன்.”

“நீ எப்ப ஊருக்கு வர்ற?”

“அடுத்த மாசம் இல்ல அதுக்கு அடுத்த மாசம் வரலாம்ன்னு இருக்கேன். அப்ப வந்து பாக்குறேன்.”

சொல்லி வைத்தது மாதிரி தான் எல்லாம் நடக்கிறது. அவனிடம் எதேட்சையாய் சொன்ன அதே அடுத்த மாதத்திற்கு அடுத்த மாதத்தில் நான் ஊருக்கு வந்திருக்கிறேன். வந்து மூன்று நாட்களாகியும் இந்த நிமிடத்திற்கு முன்பு வரை அவனை பார்க்கவில்லை. பார்க்கவில்லை என்பதை விட பார்க்க முடியவில்லை என்பது தான் சரி.

“நீ எப்படா வந்த?” – கடைசியாய் சென்னையில் கேட்ட குரல் மாதிரி கூட இல்லை, கொஞ்சம் உடைந்தது மாதிரி தான் பேசினான்.

“அம்மா ரெடியா இருக்காங்களா … ஆட்டோ வந்திருக்கு பூத்து கூட்டமில்லாமதான் இருக்கு, இப்பவே ஓட்ட போட்டுட்டு வந்துறலாம். நான் டீச்சர் வீட்டுலேயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துரேன். ஒரு நிமிசம்.”

“நிக்குறது வேற யாரும் இல்ல, நம்ம ஒன்றியச் செயலாளர் பையன் தான், எப்படி பாத்தாலும் நம்ம பங்காளி தான்.”

“இல்லடா… இந்த ஒரு தடவை வேலை பார்த்துக் கொடுங்க… அடுத்த தடவை நிச்சயமா பார்த்துப் பண்ணிரலாம்னு அமைச்சரே சொல்லியிருக்காரு.”

யாதும் ஊரே யாவரும் கேளிர்!
யாதும் ஊரே யாவரும் கேளிர்!

மதுரைக்கும் தஞ்சாவூருக்கும் கடுமையான சண்டை நடந்து கொண்டிருந்த காலம் அது.  உங்கள் கற்பனையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்… எதோ சேர, சோழ, பாண்டியர் கதைன்னு நினைச்சிக்காதீங்க. என்னோட கல்லூரி விடுதியில் எனக்கும், என் அறை நண்பனுக்கும் கடுமையான சண்டை நடந்து கொண்டிருந்த காலம் அது. அவன் தஞ்சாவூர் பக்கம், நான் மதுரைப் பக்கம். எங்க இரண்டு பேருக்கும் யார் ஊரு பெருசுன்னு (!) அடிக்கடி சண்டை நடக்கும். அவன் எங்க ஊரைப் பத்தி கேவலமா பேசுவான் பதிலுக்கு நான் அவன் ஊரைப்பத்தி ரெம்ப கேவலமா பேசுவேன்.

பெரும்பாலும் அறைக்குள் மட்டும் நடக்கும் சண்டை என்னமோ தெரியல அன்றைக்குப் பார்த்து டி.வி பார்க்கும் அறையில் ஆரம்பித்து விட்டது. அட இது நல்லாயிருக்கேன்னு எல்லாரும் டி.வி-ய விட்டுட்டு எங்க சண்டைய பார்க்க ஆரம்பிச்சுடாங்க… அங்கங்க நியாத்துக்கு குரல் கொடுக்குறதுக்குண்ணே ஒரு நாலு பேரு இருப்பாங்களயா அதுல ஒருத்தன் என் பக்கமா பேச ஆரம்பிச்சான், அவன் திண்டுக்கல். நீ.. திண்டுக்கல்காரன் … நீ பேசாதேன்னு சொன்னவுடனே வந்தது பாரு கோபம்… ஏன்டா எக்மோர் வேற சென்னை வேறயா… அவனும் மதுரைக்காரன் தான்டா… ஒரு ஏறு ஏறினேன்.

அப்புறம் நேரம் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமா தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடின்னு பெரிய கூட்டமா கூடிப் போச்சு…ரெம்ப பாசக்கார பசங்கய்யா. அவனும் ஒத்தையாள எவ்ளோ நேரம் தான் தாக்குப்பிடிப்பான். ஒரு கட்டத்துல போங்கடா போங்கா நீங்களும் உங்க மதுரையும்…. வோர்ல்ட் மேப்ப எடுத்து மதுரைய சுத்தி ஒரு அடிக்கு காம்பஸ் வச்சு வட்டம் போட்டுங்கங்கடா… எல்லாரும் மதுரைக்காரன்டா…ன்னு சொல்லிட்டு போய்ட்டான்.

மனசுக்கு ரெம்ப கஷ்டமாயிருச்சு … நம்ம மதுரைக்காரன்னு தெரியாம அவன இந்த ஓட்டு ஓட்டிடேம்னு தான். அதானே … கனியன் பூங்குன்றனார் சும்மாசொல்லியிருக்க மாட்டார்ல ?

ப்ளாக்கர் (எ) வோர்ட்பிரஸ் – ஒப்பீடு
ப்ளாக்கர் (எ) வோர்ட்பிரஸ் – ஒப்பீடு

இந்த (வலைப்)பூவுலகத்தில் எனக்கென்று ஒரு வீடு தேடி வலை வலையாய் அலைந்து திரிந்து கடைசியில் இரண்டில் ஒன்று என்று முடிவு செய்தாயிற்று … இரண்டில் ஒன்று ‘ப்ளாக்கர்.காம்’ மற்றொன்று ‘வோர்ட்பிரஸ்.காம்’. இனி இந்த நிறுவனங்கள் வழங்கிவரும் இலவச சேவை பற்றிய ஒரு ஒப்பீடு.

வீட்டை பூஜையறை, சமயலறை, குளியலறை என்றுப் பிரித்து வைப்பது போல உங்கள் பதிவுகளை பல பிரிவுகளாய் வகைப்படுத்தி கொள்ள முடிந்தால் நன்றாகத்தானிருக்கும்… வேர்ட்பிரஸில் இதை அழகாய்  செய்ய முடிகிறது. உதாரணத்திற்க்கு நீங்களும் மாய்ந்து மாய்ந்து கதை, கவிதை, கட்டுரைன்னு எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், ஆனால் நீங்கள் எழுதும் நகைச்சுவைத் துணுக்குகள் தான் வாசகனுக்குப் பிடிக்கின்றது என்றால் அதை மட்டும் தேர்ந்தெடுந்து படிப்பதென்பது வோர்ட்பிரஸ்-ல் சுலபம், அதுவே ப்ளாக்கர்-னா தாவு தீர்ந்து போயிரும்.

பெரும்பாலான குடியிருப்பு வீடுகளில் செல்லப் பிராணிகளுக்கு அனுமதி இருக்காது அது அவர்களே விரும்பினாலும் கூட. எறக்குறைய பெரும்பாலான வலைப்பதிவு சேவைகளில் பதிவுகளுக்கு மட்டுமே அனுமதி, அதிகபட்சமாக நிழற்ப்படங்கள், கோப்புகளை வலையேற்ற வேண்டுமெனில் வேறு சேவைகளைத்தான் தேட வேண்டும். ஆனால் வோர்ட்பிரஸ் பதிவுகளோடு கோப்புகளையும் வலையேற்ற வசதியளிக்கிறது.

வோர்ட்பிரஸில் உங்கள் வலைப்பூவை மட்டுமல்ல உங்கள் வலைப் பதிவுகளையும் கடவுச்சொல் கொண்டு பாதுகாத்துக் கொள்ள முடியும், உங்கள் பதிவின் வாசகர்களைக் கூட நீங்களே தீர்மாணிக்கலாம். இவைத் தவிர உங்கள் வலைப் பதிவுகளை ‘தேடு இயந்திரங்களுக்கு’ அளிப்பதா வேண்டாமா என்று கூட நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

மறுமொழிகள் மட்டுறுத்தலில் ப்ளாக்கரை விட வோர்ட்பிரஸ் சிறப்பான வசதிகளை அளிக்கிறது. உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களின் (!) மறுமொழி ஒவ்வொரு முறையும் உங்கள் மட்டுறுத்தலுக்காக காத்திருக்க தேவையில்லை, நீங்கள் ஒரு முறை மறுமொழி அனுமதித்து விட்டால் மட்டுமே போதும்… பழகியவர்களை மட்டும் அனுமதிக்கும் வீட்டு நாய் மாதிரி. இது தவிர மறுமொழி இட்டவர்களின் ஐ.பி முகவரி உட்பட அனைத்து தகவல்களையும் மோப்பம் பிடித்து தந்து விடும்.

ம்ம்… அப்புறம் …

நல்ல நாள், பெரிய நாள் காட்டுகின்ற ‘நாட்க்காட்டி’ மாதிரி நீங்க பதிவு போட்ட நல்ல நாளை(?) குறித்து வைத்துக் காட்டும் ஒரு ‘நாட்க்காட்டி’…

உங்கள் வீட்டிற்க்கு எத்தனை பேர் வந்தார்கள், யார் சொல்லி வந்தார்கள், எதனைத் தேடி வந்தார்கள் போன்ற விவரங்களை நாள் வாரியாக, மாத வாரியாக அளிக்கும் ஒரு வருகைப் பதிவேடு …

வீட்டிற்க்கு முன்னால் இருக்கும் இடத்தில் பூந்தோட்டம் போடுவது, சின்ன விளையாட்டு இடம் அமைப்பது போல, வோர்ட்பிரஸ்-ல் வலைப் பதிவுகள் மட்டுமல்லாமல் தனிப்பக்கங்களையும் (உங்களைப் பற்றி …உங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளின் பட்டியல் …) உருவாக்கிக் கொள்ள முடிகிறது…

ஆனா இருக்கின்ற வீட்டை மாற்றுவதெல்லாம் கடினமல்லவா? மலைப்பான கரியம் தான். ஆனால் வோர்ட்பிரஸில் இது சுலபம். ஊங்களது தற்ப்போதைய வலைப்பூவின் உரலை கொடுத்தால் போதும், அனைத்துப் பதிவுகளையும் மறுமொழிகளுடன் வோர்ட்பிரஸில் சேர்த்துவிடும். அவ்வப்போது உங்கள் வோர்ட்பிரஸ் வலைப்பதிவுகளை உங்கள் கணிணிக்கும் பிரதி எடுத்துக் கொள்ளலாம்.

எல்லாம் சரிதான், ஆயிரம் வசதி செய்து கொடுத்தாலும் இங்கு ஆணி அடிக்க கூடாது, அங்கு அதை மாட்டக் கூடாது சொல்லுகின்ற வீட்டுக்காரர் மாதிரி வோர்ட்பிரஸ்-ல் அடைப்பலகைகளில் மாற்றம் செய்ய அனுமதி இல்லை (பாதுகாப்பு காரணங்களை மேற்க்கோள் காட்டுகிறார்கள்), அடைப்பலகையின் பக்கவாட்ட்டில் மட்டும் ஒரு சிலவற்றை இணைக்க/மாற்ற அனுமதிக்கிறார்கள். இங்கேதான் ப்ளாக்கர் நிற்க்கிறது… இது உங்கள் சொந்த வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் விரும்பியதை செய்து கொள்ளுங்கள் என்று சொல்லும் பெரிய மனசு கொண்ட வீட்டுக்காரர். உங்கள் வலைப் பக்கத்தை உங்கள் விருப்பம் போல் அமைத்துக் கொள்ளும் வசதி மட்டுமல்ல, பெரும்பாலன தமிழ் வலைப் பதிவர்கள் ப்ளாக்கர் சேவையை சார்ந்திருப்பதால் தமிழ் மணம் வழங்கும் ‘கருவிப் பட்டை’, தேன் கூடு வழங்கும் மறுமொழி சேகரிப்பு போன்ற வசதிகளை பெறுவது சுலபம்.

நீங்கள் தனி மரம் அல்ல தோப்பு !

ஆயிரம் தான் சொல்லுங்கள், மகிழ்ச்சி என்கிறது வீட்டிலா இருக்கின்றது … வீட்டில் இருக்கின்றவர்களிடமல்லவா…! நல்ல பதிவுகளை எதிர் நோக்குவோம்.

மகிழ்ச்சி!!!

கொசுறு: இது இன்றைய நிலைதான்… நாளைக்கோ இல்லை நாளை மறுநாளோ கூட நிலைமை மாறி விடக்கூடும் (என் வலைப்பூ முகவரி உட்பட) … போட்டி நிறைந்த இந்த உலகத்தில் வலியதே வெல்லும் … நானும் இந்த பதிவை ப்ளாக்கர் beta விலும் ஒரு பிரதி எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

தூண்டுகோல்.
தேடி சோறு நிதம் தின்று – பல

சின்னஞ் சிறு கதைகள் பேசி – மனம்

வாடித் துன்பம் மிக உழன்று – பிறர்

வாட பல செயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்

கூற்றுக் கிரை எனப் பின் மாயும் – பல

வேடிக்கை மனிதரை போல – நான்

வீழ்வேன் என்று நினைத்தாயோ ?

- மகாகவி பாரதியார்.